Home > DISTRICT-NEWS, The Nilgiris > சுற்றுலா தலங்களில் ரூ50 ஆயிரம் காலாவதி பொருட்கள் பறிமுதல்

சுற்றுலா தலங்களில் ரூ50 ஆயிரம் காலாவதி பொருட்கள் பறிமுதல்

19,December, 2014

குன்னூர், : குன்னூர் பகுதியில் ரூ.50 ஆயிரம் மதிப்பிலான காலாவதியான குளிர்பானங்கள், புகையிலை, பான் பராக் உள்ளிட்ட பொருட்களை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து அழித்தனர்.
குன்னூர் சுற்று வட் டார பகுதி டீ கடை, பேக் கரி உள்ளிட்ட பகுதிகளில் பான்பராக், புகையிலை, குளிர் பானங்கள் அதிகளவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இத னை வாங்கி பயன்படுத்தும் நுகர்வோரும் வாந்தி, பேதி மற்றும் பல்வேறு நோய் களால் பாதிக்கப்படுவதாக புகார் எழுந்தது. இதையடுத்து கலெக்டர் சங்கரின் உத்தரவின் பேரில் மாவட்ட உணவு பாது காப்பு தர கட்டுப்பாட்டு அலுவலர் ரவி தலை மையில் லேம்ஸ்ராக், டால்பின்நோஸ், சிம்ஸ்பார்க், குன்னூர் பஸ்நிலையம் உள்ளிட்ட பகுதி கடை களில் நேற்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள 10 கிலோ கலப்பட தேயி லை தூள், குளிர்பானங்கள், பான்பராக், புகை யிலை உள்ளிட்ட பொருட் கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டன. ஆய்வின் போது உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் சிவராஜ், அருள்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.
இதுகுறித்து மாவட்ட உணவு பாதுகாப்பு தர கட்டுப்பாட்டு அலுவலர் ரவி கூறுகையில், ‘மொத்த விற்பனையாளர்களிடம் இருந்து வாங்கும் பொருட்களில் உற்பத்தி செய்த தேதி, அதன் விலை உள்ளிட்டவை குறிப்பிட பட்டுள்ளதா என்பதை தெரிந்து வாங்க வேண்டும். குளிர்பானங்கள் இரண் டரை மாதங்களுக்கு மட் டுமே பயன்படுத்த வேண் டும். எக்காரணத்தை கொண் டும் நோய்களை பரப்பும் புகையிலை உள் ளிட்ட போதை பொருட் களை விற்பனை செய்ய கூடாது. இதேபோல் தேயிலை தூள்களில் கலப்படம் செய்வதை தவிர்க்க வேண்டும். தொடர்ந்து இது போன்ற செயல்களில் ஈடுபடுவர்கள் மீது உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,’ என்றார்.