Home > NEWS > பன்றி, டெங்கு காய்ச்சல் எதிரொலி பெரம்பலூர் ஓட்டல்களில் விழிப்புணர்வு போஸ்டர் ஒட்டும் பணி துவக்கம்

பன்றி, டெங்கு காய்ச்சல் எதிரொலி பெரம்பலூர் ஓட்டல்களில் விழிப்புணர்வு போஸ்டர் ஒட்டும் பணி துவக்கம்

4,March, 2015

பெரம்பலூர், : பன்றிக் காய்ச்சல், டெங்குக் காய்ச்சல் எதிரொலி. உணவுப் பாதுகாப்புத்துறை, சுகாதாரத்துறை சார்பாக 250க்கும்மேற்பட்ட ஓட்டல்களில் விழிப்புணர்வு போஸ்டர் ஒட்டும்பணி துவங்கியது. தமிழகத்தில் பல்வேறு இடங்களில் டெங்கு  காய்ச்சல் பாதிப்பு காணப்படுகிறது. அதே போல் பன்றிக்காய்ச்சல் குறித்த அச்சமும் எழுந்துள்ளது. காய்ச்சல்,சோர்வு, தலை வலி, உடல்வலி, வாந்தி, எலும்புவலி ஆகியவை டெங்கு காய்ச்சல் பாதிப்பின் அறிகு றியாகும். டெங்கு வைரஸ் ரத்தத்தட்டு அணுக்களை அழித்து விடுவதால், ரத்தத் தட்டுக்கள் எண்ணிக்கை குறைந்து, அது நுரையீரல், வயிறு, பல்ஈறு, சிறுநீர்ப் பாதை களில் ரத்தக்கசிவை ஏற்படுத்தும். இதற்கு உரிய மருத்துவ சிகிச்சை பெறாவிட்டால் உயிரிழப்புகூட நேரிடும். அதேபோல் புதிதாக அச்சுறுத்தி வரும் பன்றிக்காய்ச்சல் இன்புளூயன்ஸா எனப்படும் வைரஸ் கிருமிகளால் ஏற்படுகிறது. சளி, காய்ச்சல், இருமல், தும்மல், தலைவலி, தொண்டைவலி போன்றவை நோய்க்கான அறிகுறியாகும். பாதிக்கப்பட்ட ஒருவர் இரு முவதால் பன்றிக்காய்ச்சல் அடுத்தவருக்குத் தொற்றுகிறது. இதற்குத் தகுந்த சிகிச்சை யைப் பெற வேண்டும். இந்நிலையில் இந்த இரு நோய்களும் ஒரே சமயத்தில் தமிழகத் தில் அச்சறுத்தி வருவதால் சுகாதாரத்துறை மூலம் பல்வேறு பாதுகாப்பு, தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பெரம்பலூரில் பன்றிக்காய்ச்சல், டெங்கு காய்ச்சல் பாதிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த சுகாதாரத்துறை சார்பாக பொதுமக்களுக்கு துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டு வருகிறது. நேற்று பெரம்பலூர் மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை சார்பாக ஓட்டல்களில் விழிப்புணர்வு போஸ்டர்கள் ஒட்டும்பணி துவங்கியது. இதில் சுகாதாரத்துறை உதவிஇயக்குநர் ராஜேந்திரன், மாவட்ட மலேரியா அலுவலர் சுப்ரமணியன், உணவு பாதுகாப்பு நியமனஅலுவலர் டாக்டர் புஷ்பராஜ், பயிற்சி மருத்துவர் நேரு, உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் இணைந்து பணியாற்றினர். இதன்படி பழையபஸ்டாண்டு, காமராஜர் வளைவு, புதுபஸ்டாண்டு, துறைமங்க லம், நான்குரோடு மற்றும் மாவட்டஅளவிலுள்ள 250க்கும் மேற்பட்ட ஓட்டல்களில் போஸ்டர்கள் தினமும் ஒட்டப்பட்டு வருகிறது என மாவட்ட உணவுப் பாதுகாப்பு மற்றும் நியமன அலுவலர் டாக்டர் புஷ்பராஜ் தெரிவித்துள்ளார்.

Categories: NEWS
  1. 5,March, 2015 at 7:32 am

    உணவு பாதுகாப்பு விழிப்புணர்வுக்கு முன்னுரிமை தேவை

  1. No trackbacks yet.
Comments are closed.