Home > Dindigul, DISTRICT-NEWS > நத்தம் பகுதியில் அரசு அனுமதி இல்லாமல் செயல்பட்டு வந்த 4 மினரல் வாட்டர் கம்பெனிகளை அரசு அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர்

நத்தம் பகுதியில் அரசு அனுமதி இல்லாமல் செயல்பட்டு வந்த 4 மினரல் வாட்டர் கம்பெனிகளை அரசு அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர்

5,March, 2015

 

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதிகளில் கடந்த சில நாட்களாக போலி மினரல் வாட்டர் கம்பெனிகள் அதிக அளவில் இருப்பதாகவும், இக்கம்பெனிகள் அரசு அனுமதி பெறாமல் கம்பெனிகள் இயங்கி வருவதாகவும், சுகாதாரமற்ற முறையில் தண்ணீர்கள் தயாரித்து விற்பனை செய்வதாகவும், உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை மாவட்ட நியமன அலுவலர் சாம் இளங்கோ, மதியரசு, தலைமையில் அதிகாரிகள் நத்தம் பகுதியில் உள்ள நத்தம், அய்யனார்புரம், கோவில்பட்டி உள்ளிட்ட இடங்களில் உள்ள மினரல் வாட்டர் கம்பெனிகளில் திடீர் சோதனை நடத்தினர். இச்சோதனையில் அரசு அனுமதி பெறாமல் மினரல் வாட்டர் தயாரித்து விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. அந்த நிறுவனங்களை அரசு அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர். மேலும் சாணார்பட்டி பகுதிகளில் அரசு அனுமதி இல்லாமல் செயல்பட்டு வரும் மினரல் வாட்டர் கம்பெனிகள் மீது நடவடிக்கை எடுக்கப்போவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Categories: Dindigul, DISTRICT-NEWS