Home > NEWS > காலாவதியான குளிர்பானங்களை, பறிமுதல் செய்யாமல், உணவு பாதுகாப்பு அலுவலர்கள் வேடிக்கை

காலாவதியான குளிர்பானங்களை, பறிமுதல் செய்யாமல், உணவு பாதுகாப்பு அலுவலர்கள் வேடிக்கை

16,April, 2015

தர்மபுரி: தர்மபுரியில், உடலுக்கு தீங்கை ஏற்படுத்தும் வகையில் தயாரித்து, பிரபல நிறுவனங்களின் பெயரில் விற்பனை செய்யப்படும், காலாவதியான குளிர்பானங்களை, பறிமுதல் செய்யாமல், உணவு பாதுகாப்பு அலுவலர்கள் வேடிக்கை பார்த்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.கோடை காலம் துவங்கியதையடுத்து, தர்மபுரி மாவட்டம் உட்பட, பல்வேறு மாவட்டங்களில், வெயிலின் அளவு, 100 டிகிரியை தாண்டியது. இதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்ட சிலர், பிரபல நிறுவனங்களின் பெயரில், போலியாக தயாரித்த பாக்கெட்டுகளில், குளிர்பானம் விற்பனை செய்கின்றனர்.
குளிர்பான பாக்கெட்களை, அதன் தயாரிப்பாளர், கிராமம் வரை உள்ள சிறிய கடைகளுக்கு, குறைந்த விலைகளில் விற்பனை செய்கின்றனர். அதிகபட்சமாக, 5 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதால், வியாபாரிக்கு அதிக வருவாய் கிடைக்கிறது. போலி குளிர்பான பாக்கெட் தற்போது, பொதுமக்களும் அதன் விவரம் தெரியாமல் வாங்கி குடிக்கின்றனர்.
குறிப்பாக, பஸ் ஸ்டாண்ட் மற்றும் மக்கள் கூடும் பகுதிகளில், தட்டுக்களில், வைத்து, போலி குளிர்பான பாக்கெட்களை விற்று வருகின்றனர். தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில், பிரபல குளிர்பான நிறுவனங்களின், காலாவதியான குளிர்பான விற்பனை அமோகமாக நடக்கிறது.””உணவு பாதுகாப்பு அலுவலர், உரிய நடவடிக்கை எடுக்காமல் உள்ளதால், போலி குளிர்பான நிறுவன எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதை தடுக்க, பாரபட்சம் இன்றி, உணவு பாதுகாப்பு அலுவலர் குழுவினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளன

Categories: NEWS