Home > NEWS > உணவு பாதுகாப்பு அதிகாரிகள் செஞ்சி நகரில் அதிரடி ஆய்வு

உணவு பாதுகாப்பு அதிகாரிகள் செஞ்சி நகரில் அதிரடி ஆய்வு

9,April, 2015

imggallery

செஞ்சி: செஞ்சியில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு நடத்தி, 30 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பொருட்களை பறிமுதல் செய்தனர். மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் ஆறுமுகம் தலைமையில், உணவு பாதுகாப்பு அலுவலர்கள் கதிரவன் ஜெயராமன், கணேசன் ஆகியோர் நேற்று செஞ்சியில் ஆய்வு செய்தனர். செஞ்சி கடைவீதி, பஸ்நிலையம் பகுதியில் அதிகாரிகள் குழுவினர் ஆய்வு நடத்தினர். கடை வீதியில் டாப் சன் பெயரில் விற்பனை செய்யப்பட்ட போலி டீத்தூள் பாக்கெட்டுக்களை பறிமுதல் செய்தனர். பஸ்நிலைய பகுதியில் அதிகளவில் கலர் பவுடர்களை பயன்படுத்திய உணவு பொருட்களை விற்பனை செய்ய கூடாது என தடை விதித்தனர். ஹான்ஸ் பாக்கெட்டுக்கள், காலாவதியான குளிர்பானங்கள் என, 30 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பொருட்களை பறிமுதல் செய்தனர்.

Categories: NEWS