Home > NEWS > போலி கூல்டிரிங்க்ஸ் விற்பனை அதிகரிப்பு

போலி கூல்டிரிங்க்ஸ் விற்பனை அதிகரிப்பு

11,April, 2015

குளித்தலை: குளித்தலையில் பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட பல இடங்களில், போலி கூல்டிரிங்க்ஸ் கடைகளில் விற்பனை செய்யப்படுகிறது. அதிகாரிகள் கண்டுகொள்ளாததால் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். கரூர் மாவட்டம் குளித்தலை, தோகைமலை, அய்யர்மலை, தரகம்பட்டி, பஞ்சப்பட்டி பகுதியில் கோடைகாலத்தை முன்னிட்டு புதிய குளிர்பானக் கடைகள் உதயமாகியுள்ளது. இவர்கள் மார்க்கெட், பழக்கடைகளில் அழுகி வீணாகிய பழங்களை குறைந்த விலைக்கு வாங்கிவந்து, பழரசம், எசன்ஸ் கலந்து விற்பனை செய்கின்றனர்.

பொதுமக்கள் தாகத்துக்கும், வெப்பத்தை தணிக்கவும், இந்த போலியான குளிர் பானம் என்று தெரியாமல் வாங்கி குடிக்கிறார்கள். இதனால் பல்வேறு உடல் உபாதைகளுக்கு ஆளாகின்றனர். தரமற்று தயாரிக்கப்படும் குளிர்பானம், பாட்டில்களில் அடைத்தும் சில இடங்களில் விற்பனை செய்கின்றனர். தயாரிப்பு நிறுவனம், தயாரிக்கப்பட்ட தேதி, விலைப்பட்டியல், காலாவதி நாள், என எதுவும் இல்லாமல், குளிர்பானத்தை விற்பனை செய்கின்றனர். மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரிகள், இதுபோன்ற கடைகளில் விற்பனை செய்வதை, ஆதாயத்தால் கண்டுகொள்வது இல்லை என பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

Categories: NEWS