Home > NEWS > ஆரோக்கியமாக இருக்க வழி என்ன? நிபுணர்கள் கருத்து

ஆரோக்கியமாக இருக்க வழி என்ன? நிபுணர்கள் கருத்து

19,April, 2015

ஆரோக்கியமாக இருக்க வழி என்ன? நிபுணர்கள் கருத்து
சென்னை,  ஆரோக்கியமாக இருப்பது என்பது கடுமையான உணவுக் கட்டுப்பாடுகளைப் பின்பற்றுவது, நம்ப முடியாத அளவுக்கு மெலிதாக இருப்பது அல்லது நீங்கள் மிகவும் விரும்பும் உணவைச் சாப்பிடாமல் தவிர்ப்பது ஆகியவற்றைக் கொண்டதல்ல. அல்லது அது ஏதாவது ஒரு வகை உணவை அளவுக்கு அதிகமாக எடுத்துக்கொள்வது பற்றியதல்ல. பதிலாக அது அதிக ஆற்றலைப் பெறுவது, உங்களுடைய தோற்றத்தை மேம்படுத்துவது மற்றும் உங்கள் மனநிலையை நிலைப்படுத்துவது பற்றியதாகும் என்று.நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர் .

அளவுக்கு அதிகமான உடல் எடையை விரைவாகக் குறைக்க உதவும் உத்தரவாதமளிக்கப்பட்ட எடைக் குறைப்புத் திட்டங்களில் நாம் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறோம். கலோரிகளைக் குறைப்பதன் மூலமும் ஒட்டுமொத்த உணவுத் தொகுதிகளையும் தவிர்ப்பதன் மூலமும் இவற்றில் சில உணவுமுறைகளுக்கு நீங்கள் சாப்பிடும் வழிமுறையை மாற்ற வேண்டியுள்ளது.

மேலும் இவை உடலின் செயல்பாட்டுக்குத் தேவையான அனைத்து அத்தியாவசியமான நுண் ஊட்டச்சத்துக்களையும் உடல் இழக்கச் செய்கின்றன என்று .நிபுணர்கள்அறிவித்துள்ளனர் .  போதுமான ஊட்டச்சத்துக்கள் இல்லாத போது உடல் பாதிப்படையத் தொடங்குகின்றது. இத்தகைய எடைக் குறைப்பு உணவுகளை நீண்ட காலத்துக்கு எடுத்துக்கொள்பவர்களின் தலைமுடி மிகவும் அடிக்கடி உதிர்கின்றது, அவர்களின் நகங்கள் எளிதில் உடைகின்றன மற்றும் அவர்களுடைய தோல் பளபளப்புத் தன்மையை இழந்துவிடுகின்றது. உங்களுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களை நீங்கள் பெறாததன் நேரடி விளைவாக இந்த ஊட்டச்சத்துப் பற்றாக்குறைகள் ஏற்படுகின்றன.

ஊட்டச்சத்துக் குறைபாடுகள் (வைட்டமின் ஏ, டி, கால்சியம், இரும்பு, அல்லது இதர வைட்டமின்கள் மற்றும்  தாதுப்பொருட்கள் பற்றாக்குறை) குறிப்பாக வளரும் நாடுகளில் உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகளை பெருமளவு பாதிக்கின்றன. வைட்டமின் மற்றும் தாதுப்பொருள் குறைபாடுகள் மீட்டுப் பெற இயலாத கண்பார்வை இழப்பு, குறைக்கப்பட்ட நோய் எதிர்ப்புச் செயல், பலவீனமான எலும்பு வளர்ச்சி என்பன போன்ற சில தீவிரமான மருத்துவ விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். .
இந்தியச்த்துணவு அமைப்பின் தலைவர்  டாக்டர்.தரணி கிருஷ்ணன்   கூறுகையில், ”ஒரு ஆரோக்கியமான உணவு என்பது இந்த 5 உணவுத் தொகுதிகளை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்: தானியங்கள்; பால் மற்றும் மாமிச உணவுகள்; பருப்பு வகைகள், பயறு வகைகள் மற்றும் கொட்டைகள்; பழங்களும் காய்கறிகளும், மற்றும் இறுதியாக கொழுப்புகள் மற்றும் சர்க்கரைகள். இந்த உணவுகளை எடுத்துக்கொள்வதால் கார்போஹைட்ரேட்டுகள், புரதம், கொழுப்பு, வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் தண்ணீர் ஆகிய ஆறு ஊட்டச்சத்துக்கள் நமக்குக் கிடைக்கின்றன. மனித உடலின் இயக்கத்துக்கு இந்த ஒவ்வொன்றும் முக்கியப் பங்கு வகிக்கின்றன. சரிவிகித மற்றும் ஆரோக்கியமான உணவில் தண்ணீர் கூட ஒரு முக்கியப் பங்கு வகிக்கின்றது.” தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களையும் உள்ளடக்கிய ஒரு சிறப்பு உணவு இல்லையெனில், உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைப்பதற்குரிய ஒரே வழி பலதரப்பட்ட ஆரோக்கிய உணவுகளை உட்கொள்வதே ஆகும். என்றார் .

பாக்டீரியங்கள், வைரஸ்கள், வேதிப்பொருட்கள் போன்றவற்றால் மாசுபாடடைந்த உணவை உட்கொள்வதினாலும் கையாளுவதாலும் உணவின் மூலம் பரவும் நோய்கள் உலகளவில் குறிப்பிடத்தக்க சுகவீனங்களையும் மரணங்களையும் ஏற்படுத்துகின்றன. உலகம் முழுவதிலும் 2 மில்லியன் மக்கள் உணவு மற்றும் தண்ணீரின் மூலம் பரவும் நோய்களால் பாதிக்கப்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. எனவே, இந்த வருடம் உலக சுகாதார நாளுக்கான பொதுவான ஆரோக்கியப் பிரச்சனையாக ‘உணவுப் பாதுகாப்பு’ என்பதை உலக சுகாதார நிறுவனம் தேர்ந்தெடுத்துள்ளது.

நடைப்பயிற்சி, ஜாக்கிங், ஜிம்மில் சேர்வது அல்லது விளையாடுவது என்பன போன்ற ஏதாவது ஒரு வகை உடற்பயிற்சியைச் சேர்த்துக்கொள்வது, உங்களுடைய ஆரோக்கியத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் பராமரிப்புக்கும் உதவி செய்யும்.

இன்று, உலகம் முழுவதும் உள்ள மக்கள் நேரமின்மை, மன அழுத்தம் மற்றும் பரபரப்பான பயணத் திட்டங்கள் என்பன போன்ற முக்கியப் பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். இவை சரிவிகித உணவைப் பராமரிக்காதது, சரியான உணவு வகை மற்றும் தண்ணீர் உட்கொள்ளாதது அல்லது சுறுசுறுப்பான வாழ்க்கை வாழாதது ஆகியவற்றுக்கு மிகப் பொதுவாகத் தெரிவிக்கப்படும் காரணங்கள் ஆகும். “நமது உடலையும் நமது ஆரோக்கியத்தையும் கவனித்துக்கொள்வதற்கு நாம் ஒவ்வொருவரும் முதல் முன்னுரிமை கொடுக்க வேண்டும். இது உங்கள் வாழ்க்கையில் நீங்கள் செய்யும் முக்கியமான முதலீடு ஆகும். உங்களுடைய நண்பர்களுடனும் குடும்பத்தினருடனும் நேரம் ஒதுக்குவது போன்றே ‘உங்களுடைய ஆரோக்கியத்துக்கும்’ நேரம் ஒதுக்க வேண்டும். ‘மனம் இருந்தால் மார்க்கம் உண்டு’ என்ற பழமொழியை நினைவில் கொள்ள வேண்டும்.

Categories: NEWS