Home > Coimbatore, DISTRICT-NEWS > உணவு பொருட்கள் மாதிரி சேகரிப்பு கோர்ட் உத்தரவால் நடவடிக்கை

உணவு பொருட்கள் மாதிரி சேகரிப்பு கோர்ட் உத்தரவால் நடவடிக்கை

12,August, 2015

கோவை: கோர்ட் உத்தரவையடுத்து பல்வேறு உணவுப்பொருட்களின் மாதிரியை, அதிகாரிகள் சேகரித்து, பரிசோதனைக்காக அனுப்பியுள்ளனர்.கோவையில் கடந்த ஆண்டு பிரபல நிறுவனத்தின், வறுத்த கோழித்துண்டில் புழு இருப்பதாக நுகர்வோர் ஒருவர், புகார் தெரிவித்தார். இதையடுத்து உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அந்த உணவு மாதிரிகளை சேகரித்து பரிசோதனைக்கு அனுப்பினர்.இந்நிலையில் மதுரையில் உள்ள சென்னை உயர்நீதிமன்ற கிளையில், வறுத்த கோழிகள் விற்பனை செய்யும் நிறுவனங்கள் மீது, நடவடிக்கை கோரி ஒருவர் வழக்கு தாக்கல் செய்தார். இதையடுத்து இப்பொருட்களின் மாதிரிகளை சேகரித்து, பரிசோதனை செய்து அறிக்கை அளிக்குமாறு, உணவு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு கோர்ட் அறிவுறுத்தியது. இதையடுத்து பல்வேறு உணவு பொருட்களின் மாதிரிகளை அதிகாரிகள் சேகரித்து வருகின்றனர்.
கோவை மண்டல உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு நிர்வாக துறை உணவு பிரிவு நியமன அலுவலர் கதிரவன் கூறியதாவது:
சென்னையில் உள்ள உணவு பாதுகாப்பு கமிஷனர் அலுவலகத்திலிருந்து கே.எப்.சி., குர்குரே, ெஹவன்ஸ் சிக்கன் மற்றும் மேரி பிரவுன் உள்ளிட்ட உணவு பொருட்களின் மாதிரி சேகரித்து, பரிசோதனைக்கு அனுப்புமாறு உத்தரவிடப்பட்டது.
இதையடுத்து கே.எப்.சி., உணவுப்பொருட்களின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே கோவையில் வந்த புகாரின் அடிப்படையில் மாதிரி சேகரிக்கப்பட்டு பரிசோனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதன் முடிவுகளை பெற,
நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.

Categories: Coimbatore, DISTRICT-NEWS