Home > NEWS > உணவு மாதிரிகளின் வகையை மாற்றியது அரசுஎதிலுமே வேதிப்பொருள் அதிகம் இல்லையாம்

உணவு மாதிரிகளின் வகையை மாற்றியது அரசுஎதிலுமே வேதிப்பொருள் அதிகம் இல்லையாம்

14,August, 2015

சட்ட ரீதியான ஆய்வுக்கு எடுக்கப்பட்ட உணவு மாதிரிகள் அனைத்தையும், வழக்கமான கண்காணிப்புக்காக எடுக்கப்பட்ட மாதிரிகளாக, அரசு மாற்றியுள்ளது; இதன்படி,
அறிவுறுத்தல் தரலாமே தவிர, சட்ட நடவடிக்கை எடுக்க முடியாது.அனுமதித்த அளவை விட, காரீயத்தின் அளவு அதிகமாக இருந்ததால், தமிழகத்தில், ‘மேகி நுாடுல்ஸ்’ உட்பட, ஆறு நிறுவனங்களின் நுாடுல்ஸ் விற்பனைக்கு, அரசு தடை விதித்தது.
மேலும், பிற நிறுவனங்களின் நுாடுல்ஸ், பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் சிப்ஸ் முதல், பஞ்சாமிர்தம் வரையிலான பொருட்களின், 2,000 மாதிரிகள் எடுக்கப்பட்டன. மாதிரிகள் எடுத்து, இரு மாதங்களாகியும் ஆய்வு முடிவுகளை, அரசு வெளியிடவில்லை. இதுகுறித்து, நமது
நாளிதழில், நேற்று செய்தி வெளியானது.இந்நிலையில், நேற்று உயரதிகாரிகள் ஆலோசனை நடந்தது. அதன்பின், சட்ட ரீதியான ஆய்வுக்கு எடுக்கப்பட்ட மாதிரிகள் அனைத்தும், வழக்கமான கண்காணிப்பு மாதிரி
களாக மாற்றப்பட்டு உள்ளன.ஆய்வு மாதிரிகள் முடிவை வைத்தே, நடவடிக்கை எடுக்க முடியும். கண்காணிப்பு முடிவுகள் வைத்து நடவடிக்கை எடுக்க முடியாது; நிறுவனத்திற்கு ஆலோசனை தரலாம் என்பதால், வேதிப்பொருட்கள் அளவு அதிகம் இருந்தாலும், அந்த நிறுவனங்கள் சட்ட நடவடிக்கையில் இருந்து தப்பிவிடும்.
ஆனால், உணவு பாதுகாப்பு அதிகாரிகள் கூறுகையில், ‘தடை செய்யப்பட்ட, ஆறு நிறுவன மாதிரிகள் தவிர, வேறு எந்த மாதிரிகளிலும், உடலுக்கு தீங்கு விளைக்கும் பாதிப்பு கண்டறியப்படவில்லை. உணவு மாதிரிகள் எடுக்கும் பணி தொடர்ந்து வருகிறது. பாதிப்பு கண்டறிந்தால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றனர்.

Categories: NEWS