Home > NEWS > டாஸ்மாக் மதுபானங்களை ஆய்வு செய்ய வேண்டும்: மதுரை ஐகோர்ட்டில் வழக்கு

டாஸ்மாக் மதுபானங்களை ஆய்வு செய்ய வேண்டும்: மதுரை ஐகோர்ட்டில் வழக்கு

18,August, 2015

மதுரை, ஆக. 15–

தமிழக பொது நல வழக்கு மைய அமைப்பாளர் ரமேஷ், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள பொது நல மனுவில் கூறியிருப்பதாவது:–

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு 11 மதுபான நிறுவனங்கள் மூலம் மது வகைகள் வினியோகம் செய்யப்படுகிறது. இதை தினசரி லட்சக்கணக்கானோர் குடித்து வருவதால் பாதிப்புக்குள்ளாகி வருகிறார்கள். இந்த மதுபானங்கள் தரமானதாக இல்லை.

போதைக்காக நச்சுத்தன்மை கொண்ட ரசாயனங்கள் அதிக அளவில் மதுபானங்களில் கலக்கப்படுகிறது.

இதை தடுக்க இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் எந்த உறுதியான நடவடிக்கையும் எடுப்பதில்லை. தரமற்ற மதுபானங்களை தொடர்ந்து குடிப்பதால் மூளை உள்பட பல உறுப்புகள் பாதிக்கப்படுகிறது. பலர் தற்கொலை செய்யும் நிலையும் ஏற்பட்டு வருகிறது. மேலும் மது போதையினால் வாகன விபத்துக்களும் ஏற்படுகிறது.

மதுபானங்களில் போதைக்காக நச்சுத்தன்மை கொண்ட ரசாயனங்கள் கலப்பதை தடுக்க வேண்டும்.

இது தொடர்பாக மத்திய– மாநில அரசுகளுக்கு கடந்த ஜூலை 6–ந்தேதி மனு அனுப்பினேன். அதன் அடிப்படையில் டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யப்படும் மதுபானங்களை ஆய்வு செய்ய நிபுணர் குழு ஒன்றை அமைக்க தலைமை செயலாளருக்கு உத்தரவிட வேண்டும். டாஸ்மாக் மதுபானங்கள் குடிக்க தகுதியானவையா? என்பதை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

Categories: NEWS