Home > DISTRICT-NEWS, Nagapattinam > கடைகளில் விற்பனைக்காக வைத்திருந்த ரூ.50,000 மதிப்புள்ள காலாவதி மளிகைப் பொருட்கள் அழிப்பு உணவு பாதுகாப்பு அலுவலர்கள் நடவடிக்கை

கடைகளில் விற்பனைக்காக வைத்திருந்த ரூ.50,000 மதிப்புள்ள காலாவதி மளிகைப் பொருட்கள் அழிப்பு உணவு பாதுகாப்பு அலுவலர்கள் நடவடிக்கை

26,August, 2015

நாகை, :  வேளாங்கன்னி கடைத்தெருவில் கடைகளில் விற்பனைக்காக வைத்திருந்த ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள காலாவதி மளிகைப்பொருட்கள் கைப்பற்றி அழிக்கப்பட்டது. நாகை மாவட்டம் வேளாங்கன்னி புனித ஆரோக்கிய மாதா பேராலய ஆண்டு திருவிழா வருகிற 29ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. விழாவிற்கு வரும் பக்தர்களுக்கு பாதுகாப்பான உணவு வழங்கப்படுகிறதா என்பதை கண்காணிக்கும் வகையில் மாவட்ட உணவுத்துறை சார்பில் மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் செந்தில்குமார் தலைமையில் வேளாங்கன்னி கடைத்தெருவில் நேற்று
ஆய்வு செய்யப்பட்டது.
இதில் காலாவதியான மளிகை பொருட்கள், கூல்டிரிங்ஸ், தடை செய்யப்பட்ட புகையிலை பொருடகள் விற்பனைக்காக வைக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் காலாவதியான, தயாரிப்பு நிறுவனம் குறித்த விவரம் இல்லாத உணவுப்பொருட்கள், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் உள்ளிட்டவற்றை விற்பனை செய்யக்கூடாது என்று வியாபாரிகளிடம் மாவட்ட நியமன அலுவலர் செந்தில்குமார் எச்சரிக்கை விடுத்தார்.  ஆய்வில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் அன்பழகன், ஆண்டனிபிரபு, மகாராஜா, சதீஸ், சேகர், செந்தில்குமார், கோதண்டபாணி பாலகுரு கலந்து கொண்டனர். வியாபாரிகளிடம் கைப்பற்றப்பட்ட ரூ.50 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் அழிக்கப்பட்டது.