Home > Cuddalore, DISTRICT-NEWS > மட்டிக்கல்: உணவு பாதுகாப்பு அதிகாரி ஆய்வு

மட்டிக்கல்: உணவு பாதுகாப்பு அதிகாரி ஆய்வு

8,April, 2015

கடலூர் : கடலூர் முதுநகரில் பிடிக்கப்படும் மட்டிக்கல்லை மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி ஆய்வு செய்தார்.

கடலூர் முதுநகர் செல்லும் வழியில் உள்ள சுனாமி குடியிருப்பு பகுதியில் உவர் நீர் தேங்கி நிற்கிறது. இதில் சிப்காட் ரசாயனம் கலந்த தண்ணீர் உருவாகும் மட்டிக்கல்லிலும் விஷத்தன்மை உருவாகிறது. கடந்த 4ம் தேதி இந்த மட்டிக்கல்லை சாப்பிட்ட 70க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர்.இது பற்றி தகவலறிந்த மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி ராஜா நேற்று செல்லங்குப்பம் பின் பகுதியில் உள்ள ஆற்றில் பிடிக்கப்படும் மட்டிக்கல்லை ஆய்வு செய்தார்.சிப்காட் பகுதியில் திறந்து விடப்படும் கழிவு நீரால் மட்டிக்கல்லும் விஷத்தன்மை உடையதாக மாறியுள்ளது. எனவே இப்படிப்பட்ட உணவினை உட்கொள்ள வேண்டாம் என மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி ராஜா எச்சரிக்கை விடுத்தார்.

Categories: Cuddalore, DISTRICT-NEWS