Home > Cuddalore, DISTRICT-NEWS > உணவு பாதுகாப்பு அதிகாரி ஆய்வு

உணவு பாதுகாப்பு அதிகாரி ஆய்வு

22,April, 2015

கடலூர்: கடலூர் மஞ்சக்குப்பத்தில் உள்ள மொத்த வியாபார கடையில் விற்பனை செய்யப்படும் சிப்ஸ் பாக்கெட்டுகளை மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி ஆய்வு செய்தார். கடலூர் மஞ்சக்குப்பம் நேதாஜி சாலையில் உள்ள மொத்த வியாபார கடையில் மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி ராஜா ஆய்வு செய்தார். அதில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த சிப்ஸ் பாக்கெட்டுகளை ஆய்வு செய்ததில் உற்பத்தி தேதி குறிப்பிடாமலும், சில பாக்கெட்டுகள் காலாவதியான பின்னர் விற்பனை செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. உடனே கடை உரிமையாளரை எச்சரித்தார். வட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் சுப்ரமணியன், சுகாதார ஆய்வாளர் உடனிருந்தனர்.

Categories: Cuddalore, DISTRICT-NEWS