Home > DISTRICT-NEWS, Villupuram > விழுப்புரம் நகரில் ரசாயன கற்கள் மூலம் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள் பறிமுதல்

விழுப்புரம் நகரில் ரசாயன கற்கள் மூலம் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள் பறிமுதல்

22,April, 2015

விழுப்புரம் நகரில் ரசாயன கற்கள் மூலம் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்களை உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
மாம்பழங்கள் பறிமுதல்
மாம்பழ சீசன் தொடங்கியுள் ளதை அடுத்து விழுப்புரம் நகரில் தற்போது பழக்கடை களில் மாம்பழங்கள் குவித்து வைத்து விற்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் மாம்பழங்களை வாங்கி சாப்பிட்ட சிலருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.
இதுகுறித்து உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் களுக்கு புகார்கள் தெரிவிக் கப்பட்டது. அதன்பேரில் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் ஆறுமுகம் மற்றும் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சமரேசன், சங்கரலிங்கம், முருகன், ஜெய ராஜ், பொன்ராஜ், கதிரவன் ஆகியோர் விழுப்புரம் நகரில் உள்ள பழக்கடைகளில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது எம்.ஜி.சாலை, பாகர்சா வீதி, விழுப்புரம் -புதுச்சேரி சாலை யில் உள்ள பிரபல பல்பொருள் அங்காடி ஆகியவற்றில் ரசாயன கற்கள் மூலம் மாம் பழங்கள் பழுக்க வைப்பது தெரியவந்தது. இதையடுத்து கடைகளில் ரசாயன கற்கள் மூலம் பழுக்க வைத்ததாக சுமார் 1 டன் மாம்பழங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து மாவட்ட வருவாய் அலுவலர் பிருந்தாதேவி முன்னிலையில் அவற்றை உணவு பாதுகாப்பு அலுவலர்கள் அழித்தனர்.

Categories: DISTRICT-NEWS, Villupuram