Home > DISTRICT-NEWS, Perambalur > ஜெயங்கொண்டத்தில் ரூ. 1.5 லட்சம் புகையிலை பிளாஸ்டிக் பொருள் பறிமுதல்

ஜெயங்கொண்டத்தில் ரூ. 1.5 லட்சம் புகையிலை பிளாஸ்டிக் பொருள் பறிமுதல்

23,April, 2015

ஜெயங்கொண்டம், :  ஜெயங்கொண்டம் பகுதியில் ரூ. 1.5 லட்சம் மதிப்பில் தடை செய்யப்பட்ட புகையிலை, மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை உணவு பாதுகாப்பு துறையினர், மற்றும் நகராட்சியினர் பறிமுதல் செய்து அழித்தனர்.   அரியலூர் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் மற்றும் ஜெயங்கொண்டம் நகராட்சி அதிகாரிகள் இணைந்து ஜெயங்கொண்டம் நகராட்சி பகுதியில் உள்ள கடைகளில் அரசால் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் கேரி பேக், மற்றும் கப்புகள், புகையிலை பொருட்கள் கலாவதியான பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என அதிரடி சோதனை நடத்தினர்.
சோதனையின்போது, பல கடைகளில் காலாவதியான குளிர்பானங்கள், தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் காலாவதியான பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அவற்றின் மதிப்பு ரூ1.5 லட்சம் இருதக்கும். அவற்றை அதிகாரிகள் பறிமுதல் ெசய்தனர். பின்னர் அவை நகராட்சியினர் குப்பை கிடங்கில் கொட்டப்பட்டு தீவைத்து எரித்தும் அழிக்கப்பட்டது.   சோதனையின் போது உணவு பாதுகாப்பு துறை நியமன அதிகாரி செல்வராஜ் தலைமையில் அதிகாரிகள் ரத்தினம், சிவகுமார், நயினார்முகமது, ஸ்டாலின்பிரபு, நகராட்சி ஆனையாளர் நவேந்திரன், துப்புரவு ஆய்வாளர் சிவராமகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இது குறித்து அதிகாரி செல்வராஜ் நிருபர்களிடம் பேசுகையில், இந்த சோதனைகள் தொடர்ந்து அடிக்கடி நடைபெறும். மீறி விற்பனை செய்வோர் மீது தக்க நடவடிக்கை எடுக்கபடும் என தெரிவித்தார்.

Categories: DISTRICT-NEWS, Perambalur