Home > NEWS > மேகி நூடுல்சை சந்தைக்கு கொண்டு வர நெஸ்லே நிறுவனம் தீவிரம்

மேகி நூடுல்சை சந்தைக்கு கொண்டு வர நெஸ்லே நிறுவனம் தீவிரம்

23,August, 2015

புதுடில்லி: அனுமதிக்கப்பட்ட அளவை விட வேதிப்பொருள் அதிகமாக இருந்த காரணத்தால் மேகி நூடுல்சிற்கு தடை விதிக்கப்பட்டது. இந்த தடையை கடந்த சிலநாட்களுக்கு முன் மும்பை ஐகோர்ட் நீக்கியது. இதனையடுத்து இந்த ஆண்டு இறுதிக்குள் மேகியை சந்தைக்கு கொண்டு வர நெஸ்லே நிறுவனம் தீவிரம் காட்டி வருகிறது. மேகி உட்பொருளின் சுவையூட்டிகளில் எந்தவித மாற்றமும் செய்யப்பட மாட்டாது என நெஸ்லே நிறுவனம் அறிவித்துள்ளது. நெஸ்லே இந்தியாவின் நிர்வாக இயக்குநர் சுரேஷ் நாராயணன் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், மும்பை ஐகோர்ட் வழிகாட்டுதல்படி பஞ்சாப், ஐ தராபாத், ஜெய்ப்பூரில் உள்ள சோதனை நிலையங்களில் மேகி பரிசோதனை செய்யப்படும். அனைத்து அங்கீகாரமும் பெற்று விடும் பட்சத்தில், மேகி நூடுல்ஸ் செப்டம்பரில் சந்தைக்கு வந்துவிடும் என கூறினார். தடை காரணமாக நெஸ்லே நிறுவனத்துக்கு சுமார் ரூ.450 கோடி இழப்பு ஏற்பட்டது.

Categories: NEWS