Home > DISTRICT-NEWS, Thanjavur > தஞ்சை அருகே உடல் நலத்தை பாதிக்கும் ஆந்திரா பருப்பு விற்பனை

தஞ்சை அருகே உடல் நலத்தை பாதிக்கும் ஆந்திரா பருப்பு விற்பனை

26,August, 2015

தஞ்சை அருகே உடல் நலத்தை பாதிக்கும் ஆந்திரா பருப்பு விற்பனை

தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டி பகுதியிலுள்ள கிராமங்களில் ஆந்திர மாநில பதிவு எண் மற்றும் வேலூர் மாவட்ட பதிவு எண் கொண்ட மோட்டார் சைக்கிளில் வைத்து படி ரூ 50 என்ற விலையில் பருப்பு விற்கப்படுவதாகவும், இந்த பருப்பு செங்கிப்பட்டி அருகில் உள்ள சானூரப்பட்டி மற்றும் புதுக்குடி பகுதியில் இருப்பு வைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதாகவும். இந்த பருப்பு பயன்படுத்தக் கூடாத நச்சு பொருட்கள் நிறைந்த பருப்பு எனவும் தஞ்சை மாவட்ட உணவு பாதுகாப்பு துறைக்கு தகவல் கிடைத்தது.

இந்த தகவலை அடுத்து தஞ்சை மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் டாக்டர் தட்சணாமூர்த்தி, அலுவலர்கள் டி.ரெங்கநாதன், ஆர்.குமார், சி.கார்த்தி ஆகியோர் நேற்று சானூரப்ட்டி பகுதியில் ரகசிய சோதனை மேற்கொண்டனர்.

இந்த சோதனையில் சானுரப்பட்டி மெயின் சாலை பகுதியில் கட்டளைகால்வாய் கரையோரம் அமைந்த ஒரு வீட்டில் இந்த வகை பருப்புகள் பதுக்கிவைக்கப் பட்டிருப்பதை கண்டறிந்தனர். அதிரடியாக அந்த வீட்டிற்குள் சென்று பார்த்த போது அந்த வீட்டின் ஒரு அறையில் பிளாஸ்டிக் பைகளில் கட்டப்பட்டிருந்த 40 மூட்டை கேசரி பருப்பு இருந்தது. இந்த பருப்பை விற்பனை செய்த சுரேந்திரன் என்ற நபர்டம் விசாரித்தபோது காட்பாடி பகுதியை சேர்ந்தவர் என்றும், அங்கிருந்து கொள்முதல் செய்து வந்து இங்கு விற்பனை செய்து வருவதாக தெரிவித்தார். இந்த வகை பருப்பு பயன்படுத்த கூடாது என்பது தங்களுக்கு தெரியாது என்றும், தாங்கள் குடும்பத்துடன் வந்து இங்கேயே தங்கி சமைத்து சாப்பிட்டு விற்பனை செய்து விட்டு சென்று விடுவோம் என்றும் கூறினார். அந்த பருப்பை மாதிரி எடுத்துக் கொண்டு பருப்பு மூட்டைகள் இருந்த அறையை பூட்டி உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் தட்சணாமூர்த்தி சீல் வைத்தார்.

சானூரப்பட்டியில் கிடைத்த தகவலை அடுத்த இந்த குழுவினர் புதுக்குடி மெயின்சாலை பகுதியில் இரண்டு அறைகளில் வைக்கப்பட்டிருந்து 101 மூட்டை பருப்புக்களை கைப்பற்றினார்கள். இந்த பருப்புக்களை ஆந்திர மாநிலத்தில் சந்தையில் இருந்த கொள்முதல் செய்து சானூரப்பட்டி மற்றும் புதுக்குடியில் வைத்து இரண்டு சக்கர வாகனத்தில் வைத்து கிராமப்புறங்களில் விற்று வந்த காட்பாடி கண்டிப்பேடு கிராமத்தைச் சேர்ந்த மோகன்(47) அசுரன்(22) வரதன்(65¨) ஜேயவேல்(44) நரேஷ்(25) ஆகீயோரிடம் பறிமுதல் செய்த பருப்பு மூட்டைகளை புதுக்குடி ஊராட்சி மன்ற தலைவர் வசம் பாதுகாப்பாக வைத்து மாவட்ட கலெக்டரிடம் தகவல் தெரிவித்தனர்.

இது குறித்து உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் டாக்டர் தட்சணாமூர்த்தி இந்த வகை பருப்ப கேசரி பருப்பு என்று சொல்லப்படும் இந்த பருப்பில் நீரொ டாக்சிலின் என்ற நச்சுதன்மை உள்ள பொருள் உள்ளது. இதனை சாப்பிட்டால் கை கால்கள் செயல் இழந்து விடும் சதை பிடிப்பு முடக்குவாதம் போன்ற நோய்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்தார்.

இந்த பருப்பின் மாதிரிகள் உணவு பகுப்பாய்வு மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு அதன் முடிவுகளின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும். அது வரை இந்த பருப்பை யாரும் பயன்படுத்தாத வகையில் சீல் வைக்கப்படும். இது போல் குறைந்த விலையில் கொண்டு வந்து தரும் பொருட்கள் குறித்து பொதுமக்கள் விழிப்பாக இருந்து தங்களை காத்துக் கொள்ள வேண்டும் என்று கூறினார்.

Categories: DISTRICT-NEWS, Thanjavur