Home > Chennai, DISTRICT-NEWS > உணவு சாப்பிட்டு சிறுவன் பலி: வடசென்னை கடைகளில் விற்கப்படும் ரச பொடியில் விஷம்?

உணவு சாப்பிட்டு சிறுவன் பலி: வடசென்னை கடைகளில் விற்கப்படும் ரச பொடியில் விஷம்?

26,August, 2015

பெரம்பூர் : கொடுங்கையூர் கிருஷ்ணமூர்த்தி நகர், நவஜீவன் தெருவை சேர்ந்தவர் பிரபாகரன் (42). தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி ரேணுகா (38).  மகன்கள் பால்ராஜ்(10), ஹரி (12). பிரபாகரனின் தாய் அம்சவள்ளி (72). கடந்த 23ம் தேதி இரவு இவர்கள் உணவு சாப்பிட்டனர். காலையில் எழுந்த போது  அனைவருக்கும் வாந்தி, பேதி, மயக்கம் ஏற்பட்டது. இதை தொடர்ந்து அக்கம்பக்கத்தினர் இவர்கள் அனைவரையும் மீட்டு தண்டையார்பேட்டை காலரா  மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்றனர். அங்கும் சிகிச்சை பலனளிக்கவில்லை. ேநற்று காலை மேல் சிகிச்சைக்காக ஸ்டான்லி   மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதில் பால்ராஜ் இறந்தார். மற்றவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது குறித்து கொடுங்கையூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றார். இவர்கள் சாப்பிட்ட உணவு விஷமாக மாறியதா? என்று கோணத்தில்  போலீசார் விசாரிக்கின்றனர். இது போன்று கடந்த மாதம் கொண்டிந்தோப்பில் ஒரே குடும்பத்ைத சேர்ந்த 4 பேர் இரவு உணவு சாப்பிட்டு இறந்தனர் என்பது  குறிப்பிடதக்கது.இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது:- வடசென்னை பகுதிகளில் உள்ள கடைகளில் விற்க்கப்படும் ரச பொடியில் விஷ தன்மை இருப்பதாக  பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதனாலே இது போன்ற சம்பவங்கள் நடப்பதாக கூறப்படுகிறது. இதை மாநகராட்சி அதிகாரிகள் கண்டுகொள்ளுவது  இல்லை. எனவே, சம்பந்தப்பட்ட உணவு பாதுகாப்பு அதிகாரிகள் வட சென்னை முழுவதும் உள்ள கடைகளில் விற்க்கப்படும் உணவு பொருட்களை சோதனை  செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோருகின்றனர். – See more at: http://www.tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=80240#sthash.ENMgZqKz.dpuf

Categories: Chennai, DISTRICT-NEWS