Home > DISTRICT-NEWS, Madurai > துரித உணவுகளில் பயன்படுத்தும் சிவப்பு நிறம் ஆபத்து ! : உணவு பாதுகாப்பு துறை மவுனம் சாதிக்கிறது

துரித உணவுகளில் பயன்படுத்தும் சிவப்பு நிறம் ஆபத்து ! : உணவு பாதுகாப்பு துறை மவுனம் சாதிக்கிறது

26,August, 2015

மதுரை: பெரியவர்கள் குறிப்பாக குழந்தைகள் விரும்பி சாப்பிடும் துரித உணவுகளில் கண்ணை பறிக்கும் சிவப்பு நிறம் பயன்படுத்துவதால், உடல்நலம் பாதிக்கும் அபாயம் உள்ளது.

மதுரையில் உணவு பாதுகாப்பு துறையினர் இதை தொடர்ந்து ஆய்வு செய்வதில்லை.பாரம்பரியமாக குழம்பு மஞ்சள் நிறம் மற்றும் பீட்ரூட் சிவப்பு வண்ணங்கள் உணவில் பயன்படுத்த தகுதியுடையன. இந்நிறங்களைத் தாண்டி ரோட்டோர, தள்ளுவண்டி கடைகளில் அடர்சிவப்பு நிறம் பயன்படுத்துகின்றனர்.

பளபளக்கும் சிவப்பு நிறத்தில் பொரித்த மட்டன், சிக்கன், காலிபிளவர், மீல்மேக்கரை பார்த்தவுடன் வாங்கத் துாண்டும். பெற்றோரும் தயக்கமின்றி குழந்தைகளுக்கு வாங்கித் தருகின்றனர். இவற்றை தொடர்ந்து பயன்படுத்தும் போது புற்றுநோய் உருவாகும் அபாயம் உள்ளது.

கண்ணுக்கு அழகாக தெரியும் சிவப்பு நிறம், அகத்தின் அழகை கெடுக்குமே.

மதுரை அரசு மருத்துவமனை டீன் ரேவதி கூறியதாவது:

சிவப்பு நிறத்திற்காக புளூரைடு ஐசோ சயனைடு வேதிப்பொருளை உணவில் சேர்க்கின்றனர். இந்த நிறம் கலந்த சைவ, உணவு வகைகளை தொடர்ந்து சாப்பிட்டால், அவை ரத்தத்தில் உட்கொள்ளப்பட்டு, நாளடைவில் புற்றுநோய் கட்டிகளை உருவாக்கும். கெட்டப்பழக்கம்

இல்லாதவர்கள் கூட துரிதஉணவுகளை தொடர்ந்து சாப்பிட்டால் வயிற்றில் புற்றுநோய் உருவாகும்.

எனவே, முடிந்தவரை கடைகளில் விற்கப்படும் துரித உணவுகளை தவிர்ப்பது நல்லது. குழம்பு மஞ்சள்கிழங்கு பொடி மிகச்சிறந்த கிருமி நாசினி. அசைவ உணவு சமைக்கும் முன் மஞ்சள்பொடியில் புரட்டி எடுப்பதால் கிருமிகள் கொல்லப்படுகின்றன. இதிலும் மஞ்சள்நிற வேதிப்பொருள் கலக்கின்றனர். குழம்பு மஞ்சள்கிழங்கு மற்றும் மிளகாய் வாங்கி அரைத்து பயன்படுத்துவது வயிற்றுக்கு நல்லது, என்றார்.

ரோட்டோரங்களில், தள்ளுவண்டிகளில் விற்கப்படும் சாப்பிட தகுதியில்லாத வண்ண உணவுகளை கண்டறிந்து தடுக்க வேண்டியது, உணவு பாதுகாப்பு துறையின் கடமை. இதுகுறித்து கருத்து கேட்க, மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் சுகுணாவிடம் அலைபேசியில் தொடர்பு கொண்டபோது அழைப்பை ஏற்கவில்லை.

ரோட்டோரங்களில், தள்ளுவண்டிகளில் விற்கப்படும் சாப்பிட தகுதியில்லாத

வண்ண உணவுகளை கண்டறிந்து தடுக்க வேண்டியது, உணவு பாதுகாப்பு துறையின் கடமை.

Categories: DISTRICT-NEWS, Madurai