Home > NEWS > மஞ்சூரில் அதிகாரிகள் அதிரடி: காலாவதியான உணவு பொருட்கள் அழிப்பு

மஞ்சூரில் அதிகாரிகள் அதிரடி: காலாவதியான உணவு பொருட்கள் அழிப்பு

19,April, 2015

 

மஞ்சூரில் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி, காலாவதியான உணவு பொருட்கள் மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து அழித்தனர்.
புகையிலை பொருட்களுக்கு தடை
தமிழகத்தில் புகையிலை பொருட்க¬ணீள விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலை யில் மஞ்சூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் காலாவதியான உணவு பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி டாக்டர் ரவிக்கு புகார்கள் வந்தன.
இதைத்தொடர்ந்து மஞ்சூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள கடைகளில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி டாக்டர் ரவி தலைமையில் அதிகாரிகள் சிவக்குமார், அருண்குமார் ஆகியோர் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது, சுற்றுலா பயணிகளுக்கு விற்பனை செய்வதற்காக கடைகளில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த சுமார் 15 கிலோ கலப்பட தேயிலை தூள் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் காலாவதியான குளிர்பானங்கள், உணவு பொருட்கள் மற்றும் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் என்று மொத்தம் ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள பொருட்களை உணவு பாதுகாப்பு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பின்னர் காலாவதியான உணவுப்பொருட்கள் பாதுகாப்பாக அழிக்கப்பட்டது.
கடும் நடவடிக்கை
இது குறித்து உணவு பாதுகாப்பு அதிகாரி டாக்டர் ரவி கூறுகையில், மஞ்சூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள காலாவதியான உணவு பொருட்கள் மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டு உள்ளது.
பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு தரமான உணவு பொருட்களையே வழங்க வேண்டும். காலாவதியான உணவு பொருட் களை வழங்கினால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்

Categories: NEWS