Home > Cuddalore, DISTRICT-NEWS > உணவு பொருட்கள் விழிப்புணர்வு டிஜிட்டல் பேனர்: கலெக்டர் வெளியீடு

உணவு பொருட்கள் விழிப்புணர்வு டிஜிட்டல் பேனர்: கலெக்டர் வெளியீடு

17,February, 2015

https://foodsafetynews.files.wordpress.com/2015/02/35f96-17_02_2015_103_023_001.jpg

கடலூர்: தமிழ்நாடு அரசு உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை சார்பில் உணவு பொருட்கள் குறித்த விழிப்புணர்வு டிஜிட்டல் பேனர் வெளியிடும் நிகழ்ச்சி நடந்தது.

கடலூர் பொதுமக்கள் குறைகேட்புக் கூட்ட அரங்கில் நடந்த நிகழ்ச்சியில் கலெக்டர் சுரேஷ்குமார் பேனரை வெளியிட்டார். உணவு பாதுகாப்பு அதிகாரி சுப்ரமணியன் பெற்றுக் கொண்டார். மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி டாக்டர் ராஜா பங்கேற்றார். விழிப்புணர்வு பேனரில், உணவு பொருட்கள் வாங்கும் போது தயாரிப்பு தேதி, காலாவதி தேதி பார்த்து வாங்க வேண்டும். சுத்திகரிக்கப்பட்ட, குளோரின் கலந்த குடிநீரை பருக வேண்டும். அயோடின் கலந்த உப்பை பயன்படுத்த வேண்டும். செயற்கை சாயம் கலந்த உணவுகளைத் தவிர்ப்போம். கலப்படத்தைத் தடுப்போம், உயிர் சேதத்தைத் தவிர்ப்போம், பான்பராக் குட்கா, புகையிலை போன்ற போதைப் பொருட் களை விலக்குவோம், புற்று நோயைத் தவிர்ப்போம் உள்ளிட்ட வாசகங்கள் அடங்கியுள்ளன.

Categories: Cuddalore, DISTRICT-NEWS