Home > DISTRICT-NEWS, Tiruppur > "கையேந்தி பவன்’களை கண்காணிக்க குழுக்கள்

"கையேந்தி பவன்’களை கண்காணிக்க குழுக்கள்

23,February, 2015

திருப்பூர்:சுகாதாரமற்ற முறையில் செயல்படும் தள்ளுவண்டி உணவு கடைகளை கண்காணிக்கவும், உணவு பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், 2 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.திருப்பூரில் உள்ள பின்னலாடை நிறுவனங்களில், வெளிமாவட்ட, வெளிமாநில தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். இவர்களை குறிவைத்து, மலிவு விலை ஓட்டல், இரவு நேர தள்ளுவண்டி கடைகள் செயல்படுகின்றன. பஜ்ஜி, வடை போன்ற எண்ணெய் பலகாரங்கள், இட்லி, தோசை, ஆப்பம் போன்ற உணவு பொருட்கள் விற்கப்படுகின்றன. தவிர, சிக்கன் வறுவல், மீன் வறுவல் போன்ற அசைவ உணவுகளும் வழங்கப்படுகின்றன.இதுபோன்ற கடைகளில் பெரும்பாலானவை, சுகாதாரமற்ற சூழ்நிலையிலும், வாகன போக்குவரத்துக்கு இடையூறாகவும் இயங்குகின்றன. கழிவுநீர் தேங்கியுள்ள சாக்கடை ஓரம், உணவு தயாரிக்கப்படுகிறது. குடிநீர் உள்ளிட்டவை சுகாதாரமான முறையில் இருப்பதில்லை. டெங்கு காய்ச்சலை தொடர்ந்து சுகாதார நடவடிக்கைகளை முடுக்கி விடப்பட்டுள்ள நிலையில், உடல் நலனை பாதிக்கும், இதுபோன்ற சுகாதாரமற்ற கடைகளையும் கண்காணிக்க வேண்டியது, அவசியமாகியுள்ளது.உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை நியமன அலுவலர் விஜயிடம் கேட்டபோது, ""திருப்பூரில் திடீர் திடீரென இரவு நேர கடைகள், தள்ளுவண்டி கடைகள் முளைக்கின்றன. சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரிப்பதை தடுக்க, கடைகளுக்கு நோட்டீஸ் வினியோகிக்கப்படுகிறது. சுகாதாரமாக உணவு தயாரிப்பது, மாசற்ற தண்ணீர் வழங்குவது. உணவு கழிவை வெளியேற்றுவது தொடர்பாக விளக்கப்பட்டுள்ளது. இப்பணியை கண்காணிக்கவும், விழிப்புணர்வு நோட்டீஸ் வினியோகிக்கவும், 2 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன,” என்றார்.

Categories: DISTRICT-NEWS, Tiruppur
  1. 25,February, 2015 at 8:45 am

    பூனை கறியும் அடங்கும் Watch out what you eat. Cat meat being sold as mutton in roadside eateries http://wp.me/p2HDZg-5wE

  1. No trackbacks yet.
Comments are closed.