Home > Coimbatore, DISTRICT-NEWS > உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ஆய்வு

உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ஆய்வு

18,February, 2015

imggallery

பொள்ளாச்சி : பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள ஓட்டல்கள் உள்ளிட்ட பகுதிகளில், உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.

பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில், டெங்கு மற்றும் பன்றிக்காய்ச்சல் நோய் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாக உணவு பாதுகாப்பு அலுவலர்களும் இந்த களப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பொள்ளாச்சி நகரப்பகுதியில் நேற்று திருச்சியைச் சேர்ந்த உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் ராமகிருஷ்ணன் மற்றும் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சுப்புராஜ், கோவிந்தராஜ், செல்வபாண்டி, காளிமுத்து, செந்தில்குமார், சனாஉல்லா ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். பொள்ளாச்சி பகுதியில் உள்ள ஓட்டல்கள், திரையரங்குகள், டீ ஸ்டால், பழமுதிர் நிலையம் மற்றும் அரசு மாணவர் விடுதிகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.

உணவு பாதுகாப்பு அலுவலர்கள் கூறுகையில்,’ உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் கதிரவன் உத்தரவின் படி ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில், பொள்ளாச்சி பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட பகுதிகளில் தொடர் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. கொசு உற்பத்திக்கான பொருட்கள் இருந்தால் அப்புறப்படுத்தப்பட்டும், கொசு உற்பத்தியாகாமல் இருக்க உரிய அறிவுரைகள் அந்தந்த நிறுவனத்திற்கு அறிவுரைகளும் வழங்கப்பட்டு வருகின்றன. தொடர் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன,’ என்றனர்.

Categories: Coimbatore, DISTRICT-NEWS
  1. 19,February, 2015 at 6:30 am

    உரிமையாளர்கள் தங்கள் உணவு விடுதிகளில் பூச்சி தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டால் டெங்கு, பன்றி காய்ச்சல் நோய்களை தவிர்க்கலாமே

  1. No trackbacks yet.
Comments are closed.