Home > DISTRICT-NEWS, Thanjavur > தஞ்சையில் உணவு பாதுகாப்பு சட்டத்தில் 7 வியாபாரிகளுக்கு அபராதம்: கலெக்டர் தகவல்

தஞ்சையில் உணவு பாதுகாப்பு சட்டத்தில் 7 வியாபாரிகளுக்கு அபராதம்: கலெக்டர் தகவல்

19,February, 2015

தஞ்சாவூர், பிப். 19–

உணவு பாதுகாப்பு மற்றும் தரநிர்ணயச்சட்டம் 2006–ல் தண்டனை பிரிவு–51 மற்றும் 52 ஆகியவற்றில் முறையே தரக்குறைவு மற்றும் தப்புக்குறியீடான உணவுப்பொருட்களை தயாரித்தாலோ, விநியோகம் செய்தாலோ, அல்லது விற்பனை செய்தாலோ தரக்குறைவு பொருட்களுக்கு அபராதமாக ரூ.5 லட்சம் வரையிலும், தப்புக்குறியீடு உள்ள பொருட்களுக்கு ரூ.3 லட்சம் வரையிலும் அபராதம் விதிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி தஞ்சாவூர் மாவட்டத்தில் உணவு பாதுகாப்பு தரநிர்ணயச் சட்டம் 2006–ன் கீழ் தஞ்சாவூர் மாவட்டத்தில் இயங்கிவரும் 7 வணிக நிறுவனங்களில் பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்பட்ட உணவு பொருட்கள் தரமற்றதாகவும், தப்புக்குறியீட்டுடன் விற்பனை செய்யப்பட்டது என்று உணவு பாதுகாப்பு அலுவலர்களால் கண்டறியப்பட்டதால் உணவு பாதுகாப்பு தரநிர்ணய சட்டம்–2006–ன் கீழ் தஞ்சாவூர் மாவட்ட வருவாய் அலுவலர், கூடுதல் மாவட்ட நடுவர் மற்றும் தீர்ப்பு அலுவலரால் விசாரணை மேற்கொள்ளப்பட்டு குற்றச்செயலில் ஈடுபட்ட கடை உரிமையாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் ஆகியோருக்கு ரூ.3 லட்சத்து 3,65 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

எனவே தரமற்ற உணவுப் பொருட்களை தயாரித்தல், விநியோகித்தல் மற்றும் விற்பனை செய்தல் போன்ற குற்ற நிகழ்வுகளில் ஈடுபடும் விற்பனை நிலையங்களின் பேரில் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்குமாறும், தரமான பொருட்கள் வாங்கிடுமாறும் தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் சுப்பையன் கேட்டுக்கொண்டுள்ளார்.

Categories: DISTRICT-NEWS, Thanjavur
  1. 20,February, 2015 at 7:41 am

    நற்பணி தொடரட்டும்

  1. No trackbacks yet.
Comments are closed.