Home > Cuddalore, DISTRICT-NEWS > டெங்கு கொசுக்கள் இருந்தால் பாருக்கு சீல்உணவு பாதுகாப்பு அதிகாரி எச்சரிக்கை

டெங்கு கொசுக்கள் இருந்தால் பாருக்கு சீல்உணவு பாதுகாப்பு அதிகாரி எச்சரிக்கை

21,February, 2015

21_02_2015_113_017_001

சிதம்பரம்:டாஸ்மாக் பார்களில் உ<ணவு பாதுகாப்பு அதிகாரி திடீர் ஆய்வு செய்த போது அங்கு திறந்து கிடக்கும் பாட்டில் தண்ணீரில் டெங்கு கொசு உற்பத்தியாகிருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இனி இதுபோன்று காணப்பட்டால் சீல் வைக்கப்படும் என எச்சரித்தார்.
சிதம்பரம் பகுதியில் ஏராளமான பொதுமக்களுக்கு காய்ச்சல் ஏற்பட்டு பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால் கலெக்டர் சுரேஷ்குமார், நேற்று சிதம்பரம் பகுதியை பார்வையிட்டு காய்ச்சல் குறித்து ஆய்வு செய்தார்.
அப்போது சிதம்பரம் பகுதியில் சுகாதார சீர்கேடு காரணமாக டெங்கு கொசு அதிக அளவில் இருப்பது தெரிய வந்தது. அதனால் டெங்கு கொசுக்களை ஒழிக்க சுகாதார துறை முடுக்கி விடப்பட்டுள்ளது.
இந்நிலையில் மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி டாக்டர் ராஜா மற்றும் உணவு பாதுகாப்பு ஆய்வாளர்கள் சிதம்பரம் நகரில் உள்ள டாஸ்மாக் பார்கள், ஓட்டல்கள், பள்ளி குடிநீர் தொட்டி உள்ளிட்டவைகளை ஆய்வு செய்தனர். அப்போது, பஸ் நிலையம் அருகே உள்ள டாஸ்மாக் பாரில் பார்வையிட்டார்.
அங்கு கிழே கிடந்த பாட்டில்களில் டெங்கு கொசுக்கள் இருந்தன. மேலும் ஏராளமான தண்ணீர் பாட்டில்களில் டெங்கு கொசு முட்டைகள் இருந்தன. இதனைப் பார்த்த உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.உடனடியாக அந்த பாட்டில்களில் இருந்த தண்ணீரை கீழே கொட்டி கொசு முட்டைகளை அழித்தனர். பின்னர், பார்களை சுகாதாரமாக பராமரிக்கவில்லை என்றால் சீல் வைக்கப்படும் என எச்சரித்தனர்.

Categories: Cuddalore, DISTRICT-NEWS