Home > Cuddalore, DISTRICT-NEWS > டெங்கு காய்ச்சல் எதிரொலி: உணவு பாதுகாப்பு அதிகாரி ஆய்வு

டெங்கு காய்ச்சல் எதிரொலி: உணவு பாதுகாப்பு அதிகாரி ஆய்வு

21,February, 2015
 

20_02_2015_006_013_001

கடலூர்: டெங்கு காய்ச்சல் எதிரொலியாக மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி ஆய்வு நடத்தினார். டெங்குநோய் ஒழிப்பு பணியில் உணவு பாதுகாப்பு துறையும் கவனம் செலுத்தி வருகிறது. கடலூரில் பிரபல ஓட்டலில் உள்ள குளிர்பதன பெட்டி, வெளிப்பகுதியில் கொட்டப்பட்டுள்ள கழிவுப்பொருட்களையும் மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி ராஜா மற்றும் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நல்லத்தம்பி, நந்தகுமார் ஆகியோர் ஆய்வு செய்தனர். உணவு விடுதிகளில் வெளியேற்றப்படும் தேங்காய் ஓடு, பேப்பர் கப், முட்டை ஓடு, பிளாஸ்டிக் பைகள், பூந்தொட்டி, குளிர்பதன பெட்டி உள்ள டிரே போன்ற பொருட்களில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். தேவையற்ற கொள் கலன்களை சுகாதாரமாக அப்புறப்படுத்த வேண்டும். பாத்திரங்களில், சிமென்ட் தொட்டிகளில் நீண்ட நாட்கள் தண்ணீரை வைத்திருக்க கூடாது. டெங்கு கொசு வளரும் இடங்களை அழிக்க வேண்டும் என அறிவுறுத்தினர். வடலூர்: ஓட்டல், டாஸ்மாக் பார்கள் சுகாதாரமாக உள்ளதா என மாவட்ட <உணவு பாதுகாப்பு அதிகாரி ராஜா தலைமையில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சுப்ரமணி, நல்லதம்பி, கொளஞ்சியான் ஆகியோர் கொண்ட குழுவினர் ஆய்வு நடத்தினர். இதில் தண்ணீர் தேங்கும் வகையில் இருந்த பிளாஸ்டிக் கப், கவர், பாட்டில், தேங்காய் ஓடு, முட்டை ஓடு, டீ கப், ஆகியவற்றை உடனுக்குடன் அப்புறப்படுத்த வேண்டும் என அறியுறுத்தினர். ஓட்டல், பார்களைச் சுற்றியுள்ள பகுதியை சுகாதாரமாக வைத்து கொள்ளவும், உணவு பாதுகாப்பு விதிகளைக் கடைபிடிக்க வேண்டும். விதிகளை பின்பற்றாமல் இருந்தால் தர நிர்ணய சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர்.

Categories: Cuddalore, DISTRICT-NEWS