Home > Cuddalore, DISTRICT-NEWS > உணவு பாதுகாப்பு அதிகாரி தர்பூசணி கடையில் ஆய்வு

உணவு பாதுகாப்பு அதிகாரி தர்பூசணி கடையில் ஆய்வு

22,February, 2015

imggallery

கடலூர் : கடலூரில் தர்பூசணி கடைகளில் மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி ஆய்வு மேற்கொண்டார்.

கடலூர் நகராட்சிக்குட்பட்ட இடங்களில் தர்பூசணி பழங்களில், செயற்கை நிறம் வரவழைக்கக் கூடிய எரித்ரோசின்-பி என்ற மருந்தை ஊசி மூலம் செலுத்தி விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட உணவு பாதுகாப்புத் துறைக்கு புகார் வந்தது.அதன்பேரில், மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி ராஜா தலைமையில், வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர்கள் குறிஞ்சிப்பாடி சுப்ரமணியன், கடலூர் நந்தகுமார் ஆகியோர் நேற்று, கலெக்டர் அலுவலக சாலையில் உள்ள, தர்பூசணி விற்பனை கடையில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.ஆய்வுக்கு பின், மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி ராஜா, நிருபர்களிடம் கூறுகையில், "எரித்ரோசின் -பி என்ற மருந்தை செலுத்தி தர்பூசணி பழங்களை விற்பனை செய்வதால் கேன்சர் நோய் வரும். தர்பூசணி பழங்களை மாதிரிக்காக கொண்டு சென்று, சென்னை கிண்டியில் உள்ள உணவு பகுப்பாய்வு மையத்தில் ஆய்வு செய்யப்படும்.ஆய்வின் முடிவில் மருந்து செலுத்தியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் விற்பனையாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.

Categories: Cuddalore, DISTRICT-NEWS